6 டிச., 2012


எமது இளைஞர்களின் உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலை தற்போது உருவாகியுள்ளது-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 
 புனர்வாழ்வளிக்கப்பட்ட எமது இளைஞர்கள் காணாமல் போகின்றனர். கடத்தப்படுகின்றனர் இதனாலேயே அவர்கள் ஆஸி. நோக்கி செல்கின்றனர். எனவே அவுஸ்திரேலிய அரசாங்கம் எமது இளைஞர்களை திருப்பி அனுப்ப வேண்டாம். அவ்வாறு அனுப்பப்பட்டால்
அவர்கள் படுகொலை செய்யப்படுவர் இல்லாவிட்டால் காணாமல் போவர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று சபையில் தெரிவித்தது.


பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பேசுகையிலேயே கூட்டமைப்பின் மட்டு. எம்.பி. பா. அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தமிழ் இளைஞர்கள் சுதந்திரமாக இன்று தமது பிரதேசங்களில் நடமாட முடியாத நிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இளைஞரான சசிக்குமார் என்பவர் மத்திய கிழக்கிற்கு போவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

அதேபோன்று கோணேஸ்வரத்தைச் சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார்.

இவ்வாறான நிலைமையிலேயே எமது இளைஞர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.