புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012

உலகளவில் மக்கள் வாழ்வதற்கு வசதியான நகரங்களை மெர்செர் என்ற ஆய்வு நிறுவனம் கணக்கெடுத்ததில் முதல் பத்து நகரங்களில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜுரிச், ஜெனீவா, பெர்ன் ஆகிய மூன்று நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
அரசியல் நிலைப்பாடு, குறைவான குற்றங்கள், நல்ல மருத்துவ வசதி ஆகியன வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தொழில் நடத்துவோர், பணிபுரிவோர், படிக்கும் மாணவர் ஆகிய
அனைவருக்கும் சுவிட்சர்லாந்து ஒரு சுகமான இடமாக மாறியுள்ளது.
சர்வதேச அளவில் வியன்னா முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதனை அடுத்து ஜுரிச், ஆக்லாந்து, மியூனிச், வான்கூவர் என வாழ்க்கைத்தரம் சிறந்த நகரங்களின் வரிசை தொடர்கிறது. ஜெனீவா எட்டாம் இடத்திலும், பெர்ன் பத்தாம் இடத்திலும் இருக்கின்றன.
கடைசி இடத்தைப் பெற்றிருப்பது ஈராக்கின் தலைநகரமாக பாக்தாத் ஆகும். ஆண்டுதோறும் மெர்செர் நிறுவனம் 221 நகரங்களைத் தரவரிசைப்படுத்துகிறது. இந்த ஆய்வினால் நிறுவனங்களும், தொழிலகங்களும் பணியாளருக்கு சமமான சம்பளம் வழங்க முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கள் தாய்நாட்டில் இருப்பதைப் போலவே சுவிட்சர்லாந்திலும் வெளிநாட்டவர் சுகமாக வாழ்கின்றனர் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருப்பதாக மெர்செர் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஸ்லாகின் பரக்கட்டில்(Slagin Parakatil) பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

ad

ad