புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012


முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற 107 பேர் கைது
புதுச்சேரியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் சுழற்சி முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி வீடு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக இந்திய குடியரசு கட்சியினர் அறிவித்து இருந்தனர். ஆனால் அதற்கு போலீசார் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் போராட்டம் நடத்த இந்திய குடியரசு கட்சியினர் இன்று காலை வழுதாவூர் சாலையில் திரண்டனர். அங்கிருந்து கட்சி தலைவர் ஞானமூர்த்தி தலைமையில் முதல்-அமைச்சர் வீட்டை நோக்கி புறப்பட்டு சென்றனர். அப்போது பிள்ளையார் கோவில் வீதி-வழுதாவூர் சாலை சந்திப்பில் வந்தபோது அவர்களை கோரிமேடு போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 72 பெண்கள் உள்பட 107 பேர் கைது செய்யப்பட்டனர்.

ad

ad