புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012


தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது: கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்
தமிழகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வரை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என்று கர்நாடக சட்டசபை கூட்டத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக விவாதிப்பதற்காக பெல்காமில் 06.12.2012 அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்திலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டம் முடிந்ததும் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
தமிழகத்திற்கு எந்த காரணத்தைக் கொண்டும் தண்ணீர் திறந்து விட முடியாது. கர்நாடக மாநிலத்திற்கே போதுமான தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. கர்நாடக மாநிலத்தில் மே, ஜூன் வரை குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீர்தான் உள்ளது. பயிர்களுக்குகூட தேவையான தண்ணீர் இல்லை. 
4 அணைகளிலும் மொத்தம் 36 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. கிருஷ்ணசாகர் அணையில் 9 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. எனவே, கோர்ட் உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம். இதுகுறித்து எனது தலைமையில் கர்நாடக காவிரி பாசன பகுதி எம்.பி.க்கள் பிரதமரை நாளை சந்தித்து அவரிடம் நிலைமையை எடுத்துக் கூற முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad