6 டிச., 2012


யாழில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் தொடர்பு: ஜயக்கொடி


 காரணமும், அறிவித்தலும் இன்றி விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 9 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்டவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.


 


வன்னியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் குறித்த நபர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது, குறிப்பிட்ட கைதுக்கும் தமக்கும் எந்தவகையான தொடர்புகளும் இல்லையெனவும் தம்மால் இதனையிட்டு எதுவும் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட புலனாய்வின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குறித்த நபர்களுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் தொடர்பிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.