புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2013

நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நிராகரித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 
நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்பதுடன் இதனூடாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதனால் அக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றாது என்று கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இந்த விசேட கூட்டத்தின் போது, வடக்கு கிழக்கில் இடம்பெறும் பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.காணி அபகரிப்பு, இராணுவம், பெண்கள் விவகாரம் குறித்து பல விடயங்கள் பரிமாறப்பட்டன.
இதேவேளை ஜனாதிபதியினால் அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என தெரிவிக்கப்பட்டதன் அடிப்டையில் இதன் மூலம் நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதே அனைவரது கருத்தாகவும் இருந்தது.

மேலும் வலிகாமம், சம்பூர் உட்பட ஏனைய பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டு மக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் இல்லாது ஒழிக்கப்பட்டு பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் நீக்கப்பட்டு மக்கள் தொழில் செய்வதற்கு இடையூறாக உள்ள பல விடயங்கள் நீக்கப்படவேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ad

ad