25 டிச., 2013

கொழும்பு-பளை ரயில் சேவை அடுத்த மாதம் ஆரம்பம்

கொழும்பிலிருந்து பளை வரையான ரயில் சேவை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. கிளிநொச்சியில் இருந்து பளை வரை யான ரயில்
பாதை கள் ரயில் நிலையங் களை நிர்மாணி க்கும் பணிகள் பூர்த்தியடைந் துள்ளதோடு சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருவதாக வடபகுதி ரயில் சேவைக்குப் பொறுப் பான பொறியியலாளர் லியோ பெர்னாண்டோ தெரிவித்தார்.
சுமார் 23 வருடங்களின் பின்னரே வடக்கில் பளைவரை யாழ்தேவி ரயில் பயணிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. யுத்தத்தினால் வட பகுதிக்கான ரயில் பாதை முற்றாக சேதமடைந்ததோடு ரயில் நிலையங்களும் முற்றாக அழிவடைந்தன. 2009ல் யுத்தம் முடிவடைந்த பின்னர் வவுனியாவில் இருந்து ஓமந்தை வரையான ரயில்பாதை நிர்மாணிக்கப்பட்டது.
வட பகுதிக்கான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணி இந்திய கொம்பனிக்கு வழங்கப்பட்டது. இதன்படி, ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையான 63 கிலோ மீற்றர் தூர பாதை பூர்த்தி செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. அடுத்து கிளிநொச்சியில் இருந்து பளை வரையான 40 கிலோ மீற்றர் பாதை தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை, பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காகவிடப் படஉள்ளது. காங்கேசன் துறை வரையான ரயில் சேவை ஜூன் மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் ரயில் பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.