25 டிச., 2013

யாழ் போதனா வைத்தியசாலை தொண்டர்களின் நியமனங்களை தட்டிப்பறிக்க அங்கஜன் இரகசிய திட்டம்
யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட சுகதாரத் தொண்டர்கள் சிலருக்கு> நாளை நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் இதன்பொது கட்சிபேத அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வந்த தொண்டர்கள் கடந்த 13 நாட்கள் போராட்டங்களை மேற்கொண்டனர்.
அத்தோடு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி மொழி வழங்கப்பட்டதற்கு இணங்க தற்காலிகமாக தமது போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெயரால் அங்கஜன் இராமநாதனால் கொடுக்கப்பட்ட பெயர்பட்டியலில் உள்ள பலருக்கு நாளை நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இவர்களோடு போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களில் சிலர் மாத்திரம் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்ற இரகசிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நியமனம் வழங்கும் நிகழ்வானது யாழ் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நாளைக் காலை நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.