25 டிச., 2013

பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம்

பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவினால் காலமானார்.
நவாப் நாற்காலி என்ற படத்தில் அறிமுகமான குள்ளமணி கரகாட்டக்காரன், பணக்காரன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிறுநீரக் கோளாறால் பாதிக்கப்பட்ட குள்ளமணி சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இவரது உடல் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு எடுத்து செல்லப்படுகிறது.