அரசு பங்களாவை நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்-மந்திரியாக ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வியாழன் கிழமை பதவி ஏற்கிறார். வழக்கமாக, டெல்லி முதல்-மந்திரிக்கு வழங்கப்படும் ’இசட்’ பிரிவு பாதுகாப்பு தனக்கு தேவையில்லை என்று ஏற்கனவே அவர் கூறிவிட்டார்.
இந்நிலையில், தனக்கோ, தனது மந்திரிகளுக்கோ அரசு பங்களாக்கள் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார். பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் குறித்து அவரை சந்தித்து பேசிய தலைமைச்செயலாளர் சபோலியாவிடம் அவர் இதைத் தெரிவித்தார்.
பங்களாக்களுக்கு பதிலாக, சிறிய அளவிலான அரசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை தங்களுக்கு ஒதுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.