சுவிஸில் ரகசிய கமெராவில் பெண்களை படமெடுத்த பொலிஸ் ஊழியரின் அயோக்கிய செயல் அம்பலமாகியுள்ளது.
சுவிஸில் பேர்ண் எம்மேந்தால் பிராந்திய பகுதியில் அமைந்திருக்கும் வாசன்(3457 Wasen ) நகரில் இருக்கும் உடற்பயிற்சி மையம் ஒன்றில் உடைமாற்றும் அறையிலும், குளியலறையிலும் ரகசிய கமெராக்கள் பொருத்தப்பட்டு படமாக்கப்பட்டது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது என பல ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட பொலிஸ் ஊழியர் பாதிக்கப்பட்ட மகளிரின் தனியுரிமையும், நெருக்கமான உணர்வுகளையும் அத்துமீறியதாக வழக்கறிஞர் ஒருவர் வாதாடியுள்ளார்.
மேலும் இச்சம்பவம் அறிந்த உடற்பயிற்சி மையத்தின் தலைவர் இத்தகவல் தனக்கு மிகுந்த அதிரிச்சியளிப்பதாகவும் மற்றும் மனவேதனையாய் உள்ளதெனவும் துக்கத்துடன் தெரிவித்துள்ளார்.