25 டிச., 2013

கபொத உயர்த்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள் - ஜனாதிபதி சந்திப்பு
கல்வி பொதுத் தராதர உயர்த்தரப் பரீட்சையில் அதிக் கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்தனர்.மாணவர்களை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி எதிர்கால கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க ஆசி வழங்கினார்.

அத்துடன் மாணவல்களுக்கு மக்கள் வங்கியின் அணுசரனையில் தலா ஒரு லட்சம் ரூபாவுக்காக காசோலைகளும் வழங்கப்பட்டதுடன் மடிக் கணனிகளும் வழங்கப்பட்டன.
உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற எகலியகொட மத்திய மகா வித்தியாலயத்தின் சத்சரனி அமாயா, பௌதீக விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற காலி ரிச்மண்ட் கல்லூரியின் அதித வீரசிறி டயஸ், வணிகப் பிரிவில் முதலிடம் பிடித்த கம்பஹா ரத்னவாலி மகா வித்தியாலயத்தின் எராந்தி காஞ்சனா, கலைப் பிரிவில் முதலிடம் பிடித்த கொழும்பு தேவி பாலிகா கல்லூரியின் மெத்சரனி லொக்குகே, தகவல் தொழிற்நுட்ப பிரிவில் முதலிடம் பெற்ற கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் துனிஷா தரங்கி பெர்ணான்டோ ஆகியோரே ஜனாதிபதியை சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, பிரதியமைச்சர் மொஹான் லால் க்றேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.