25 டிச., 2013

கொள்ளையில் பங்கில்லை! யாழ்.மாநகர மேயருடன் அமைச்சர் டக்ளஸிற்கு கருத்து முரண்பாடு
யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளதாக அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்.மாநகர சபையின் ஒளிவிழா நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதன்போது விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாநகர சபையின் தற்போதைய ஆட்சியில் தனக்கு திருப்தியில்லை என்று நிகழ்வில் உரையாற்றினார்.
மேலும் அடுத்த முறையும் தாமே ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
ஆனால் மாநகர மேயர் உரையாற்றுகையில்,
மாநகர சிறப்பான சேவையை செய்து வந்துள்ளதாக மாநகர சபையின் பணிகளை உயர்த்தி பேசினார். இதனால் நிகழ்விற்கு வந்திருந்த பலர் அதிர்ச்சியடைந்தனர்.
குறிப்பாக யாழ்.மாநகர சபையில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெரியாமல் மேயரும் அவரது கணவரும் பல கோடி ரூபாக்களை கொள்ளையடித்துள்ளதாக அமைச்சருக்கு தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஈ.பி.டி.பி க்கு இதில் எந்த பங்கும் கிடைக்காமையினால் அமைச்சர் கடுப்பாகியுள்ளார். இதன் காரணமாக மேயருக்கும் அமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளதாக இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.