புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2014


பிரதமர் பதவிக்கான பனிப் போர் ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்த ஜோதிடர்கள் நாள் குறித்து கொடுத்த பின்னர், நீண்டகாலமாக அரசாங்கத்திற்குள் இருந்த வந்த பிரதமர் பதவி தொடர்பான பனிப் போர் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர், அடுத்த பிரதமர் தாமே எனக் கூறி, அவர்களுக்கு நெருங்கமானவர்களுக்கு விருந்துபசாரங்களை நடத்தியுள்ளனர்.
எனினும் தமது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான மற்றும் எந்த நிலைமை ஏற்பட்டாலும் தமது அரசியல் அதிகாரத்திற்கு சவால் விடாத ஒருவரையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
குறிப்பாக தமது எதிர்கால இலக்கான நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர ஒத்துழைப்புகளை வழங்கும் ஒருவரையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாகும்.
ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு மிகவும் சாதகமானவராக இருக்கும் டி.எம். ஜயரத்னவையே அடுத்த பிரதமராக நியமிக்க எண்ணியிருந்தாலும் அவர் நீண்டகாலம் இருப்பாராக என்ற கேள்வி எழுந்துள்ளதால், அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதில் தடையேற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ராஜபக்ஷ குடும்பத்தினருக்குள் நடந்த கலந்துரையாடல் ஒன்றின் போது, ஜீ.எல்.பீரிஸ் அங்கிள், நம்பிக்கையானவர் என நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இதனடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை பிரதமராக நியமிப்பது என்ற யோசனை ராஜபக்ஷ குடும்பத்தினருக்குள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ad

ad