புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஏப்., 2014

யாழ். ரயில் பாதையின் பணிகள் ஆகஸ்டுடன் பூர்த்தி 
யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை மற்றும் ரயில்வே நிலையங்கள் போன்றவற்றின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட்  மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
குறிப்பாக யாழ்.மத்திய ரயில் நிலையம் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஒத்த வடிவமைப்பில்
முன்பு இருந்ததைப் போன்றே துரித கதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
 
எனவே எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் யாழ்ப்பாணம் வரையிலான ரயில் தண்டவாளம்  மற்றும் ரயில்வே நிலையங்கள் அமைக்கும் பணிகள் முற்றும் முழுதாக பூர்த்தியடைந்துவிடும் என சுட்டிக்காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.