புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஏப்., 2014

news
இன சமத்துவத்தை ஏற்படுத்தவே சர்வதேச விசாரணை கோரினோம்: பிரித்தானியா 
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் பிரித்தானியாவுக்கு இல்லை என்று பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானகர் ஜோன் ரென்கின் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தும் அமெரிக்காவின் பிரேரணைக்கு பிரித்தானியா முழுமையான ஆதரவை வழங்கி இருந்தது.ஆனால் பொருளாதார தடையை ஏற்படுத்துவது தொடர்பில் ஆலோசனை நடத்தவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் இனங்களிடையே சமத்துவத்தை  ஏற்படுத்தும் நோக்கிலேயே பிரித்தானியா இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை கோரி இருந்தது.
 
இதேவேளை  இலங்கைக்கு எதிராக பொருளதார தடையை ஏற்படுத்தும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.