புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஏப்., 2014

கோபியுடன் தொடர்பானவர் குருநகரில் கைதாம் 
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளிணைக்க முயற்சிக்கின்றார் என்று கூறி இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்று தெரிவித்து குருநகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பயங்கரவாத தடுப்புப்
பிரிவினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாணம், குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்த அருளானந்தன் டினேஷ்குமார் என்பவரே நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் தொலைபேசி ஆராய்தபோது கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. கோபியுடன் அவர் பல தடவைகள் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு அவர் பேசியுள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது,
"கோபியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசி ஆராயப்பட்டு வருகின்றது. தற்போது கைது செய்யப்பட்டள்ளவர் கோபியின் தொலைபேசி இலக்கத்துக்கு அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார். இந்த மாத ஆரம்பத்திலும் கோபி கொல்லப்படுவதற்கு முன்பாகவும் அவருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்று சந்தேகிப்பதுடன், அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினராவார்''என்று தெரிவித்துள்ளார்.