புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஏப்., 2014

பாதுகாப்பு அங்கிகளுடன் 48 மாணவிகளின் சடலங்கள் மீட்பு 
தென்கொரியாவின் பெர்ரி கப்பல் கடந்த 16ஆம் திகதி கடலில் மூழ்கிய பயணிகளை மீட்க்க  கடந்த பத்து நாட்களாக மீட்புப்படையினர்  போராடி வருகின்றனர். 
 
இந்த நிலையில் நேற்று ஒரு மீட்புப்படை வீரர், கப்பலின் உள்ளே உள்ள ஒரு அறையில் 48 மாணவிகளின் சடலங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
 
கப்பல் கடலில் மூழ்கத்தொடங்கியதும், கப்பலின் உள்ள ஊழியர்களின் அறிவுரைப்படி 48 மாணவிகளும் பாதுகாப்பு அங்கிகள் அணிந்திருப்பார்கள் என்றும், ஆனால் அவர்களால் பாதுகாப்பாக உயிருடன் வெளியே வரமுடியாமல் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இருப்பினும் மாணவிகள் அனைவரும் உயிருடன் வருவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருந்த பெற்றோர் குறித்த செய்தியை கேட்டு  கதறி அழுததாக சர்வதேச ஊடகங்கள்  செய்தி  வெளியிட்டுள்ளன. 
 
குறித்த அறையில் இருந்த 48 மாணவிகளின் சடலங்களையும் மீட்புப்படையினர் மீட்டு, வெளியே கொண்டு வந்துள்ளதாகவும் இவர்களையும் சேர்த்து இதுவரை 187 சடலங்கள் மீத்க்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் 115 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
காணாமல் போன 115 பேர்களும் உயிருடன் இருக்க வாய்ப்பு குறைவு என மீட்புப்படையினர் கருதுவதால் உயிரிழந்தவரக்ளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.