புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஏப்., 2014

ஜனாதிபதியை சந்தித்தது பாகிஸ்தான் குழு 
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தானின் பஜுலுஸ்தான் மாநிலங்கள் அவையின் உறுப்பினர்கள் குழுவினர் இன்று  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

 
 
பஜுலுஸ்தான் மாநிலங்கள் அவையின் சபாநாயகர் மிர்ஜான் முஹமட் கான் ஜமாலி தலைமையில் மாநிலங்களவையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் நேற்று பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தனர்.
 
 
இக் குழுவினருக்கு பாராளுமன்றத்தில் சபாநாயகர் விருந்துபசாரமளித்ததுடன்  சபை அமர்வுகளைப் பார்வையிடவும் ஏற்பாடு செய்துகொடுத்தார்.
 
 
இவர்கள் இம்மாதம் 29 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து இலங்கையின் புராதன நகரங்களைப் பார்வையிடவுள்ளனர்.
 
இன்றைய சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.