புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஏப்., 2014

மும்பையை வீழ்த்தி சென்னை ஹாட்ரிக் வெற்றி 
சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
நாணயசுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 50 ரன்கள் எடுத்தார். 
 
இதனையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
 
சென்னை அணியில் அதிகபட்சமாக பிரெண்டன் மெக்கல்லம் 71 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார்.  இதன் மூலம் சென்னை அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாகும். இதே போல் மும்பை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.