புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஏப்., 2014

 ஐ.நா. பேரவையில் இலங்கையை தொடர்ந்தும் பாதுகாப்போம்; சீனா 
இலங்கைக்கான  சீனாவின் உதவி தொடர்ச்சியாக கிடைக்கும் என சீன உதவி வெளிவிவகார அமைச்சர் லியு செமின் தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்த லியுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று அலரி மாளிகையில்  நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில் ஐநா. மனித உரிமைகள் பேரவையிலும் ஐநா. பாதுகாப்பு சபையிலும் சீன அரசு தொடர்ச்சியாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.
 
இவ்வருடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். ஜெனீவாவில் கடந்த மாதம் இலங்கைக்கெதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக சீனா வாக்களித்ததன் மூலம் இலங்கையின் இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பினை காப்பாற்றியுள்ளது.
 
 
 
சீனாவின் உதவியின் கீழ் இலங்கையில் குறிப்பிட்டுக் கூறும்படியான பல கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த தசாப்தங்களில் இலங்கை சீனாவுக்கு ஆற்றிய ஒத்துழைப்புகளுக்காக நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
 
மேலும் இலங்கையின் அபிவிருத்திச் செயற்திட்டங்கள், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் சீனா அதிக ஆர்வம் கொண்டிருப்பதாக லியு கூறினார்.
 
உட்கட்டமைப்பு, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளை மேலும் மேம்படுத்துவதற்காக நாம் தொடர்ந்தும் ஒன்றிணைந்து வேலை செய்வோம் என நம்புகிறேன்” எனக் கூறிய எமது ஒன்றிணைப்பானது இன்னமும் உயர்ந்த மட்டத்தை அடைய வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
 
 
இதன் போது நன்றி தெரிவித்த ஜனாதிபதி சீனாவின் உதவியுடன் பல உட்கட்டமைப்பு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளதுடன். மேலும் இலங்கையின் கைத்தொழிலில் முதலீடு செய்யுமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்