புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2015

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை வலுப்படுத்தும் நோக்கில்10,000 புலமைஒளி புத்தகங்கள்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை வலுப்படுத்தும் நோக்கில், லண்டனை தளமாகக்கொண்ட நம்பிக்கைஒளி அமைப்பின்
இணைநிறுவனமாகிய, தாயகத்தில் இரண்டு வருடங்களாக செயற்பட்டுவரும் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையினரால் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு 10,000 புலமைஒளி புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தை சேர்ந்த 57 பாடசாலைகளுக்கு, 615 புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இதில் வன்னி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் இந்திரராசா, அதிபர்கள், நம்பிக்கைஒளி அமைப்பின் இணைப்பாளர் திரு.சுபாஸ்கரன், உதவிக்கல்வி பணிப்பாளர், வலயக்கல்வி பிரதிநிதிகள், ஆசிரிய ஆலோசகர்கள் கலந்துகொண்டனர்.

ad

ad