11 ஜூலை, 2015

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - செட்டிக்குளம் விபத்தில் ஒருவர் பலி

.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது .
வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 24 வய
தான இரண்டு மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நீரில் மூழ்கிய இரண்டு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்திருந்ததாக தர்மபுரம் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றனஇ
இச்சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செட்டிக்குளம் விபத்தில் ஒருவர் பலி
வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் நோக்கி சென்ற வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி புரண்டத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த வான் சாரதி உட்பட மூன்று பேர் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதி செட்டிக்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதுடன் மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.