முரளிதரன் ( கருணா) தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற ஆசனம் வழங்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பணித்துள்ளதாக கருணா தெரிவித்தார்.
வேட்புமனுக்களில் ஒப்பமிடும் நிகழ்வுக்கு இன்று முரளிதரன் (கருணா) வருகை தந்திருந்தார். இதேவேளை கட்சியை பிளவுபடாமல் ஒரே குடையின் கீழ் கொண்டு செல்வதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கருணா வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதேவேளை மைத்திரிபால சிறிசேனவும் மகிந்தவும் ஒரே குடையின் கீழ் செயற்படுவது கட்சிக்கு மிகவும் நல்லது என்று கருணா குறிப்பிட்டார். அத்துடன் குருணாநகல் மாவட்டத்தில் களமிறங்கும் மகிந்த அமோக வெற்றியீட்டுவார் என்றார் அவர்.
அத்துடன் சிறிலங்க சுதந்திரக் கட்சி மீ்ண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவித்தார்.
முரளிதரனுக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற கதிரையை வழங்கும் சிங்கள அரசு அவரை இன்றுவரை பாதுகாப்பாக அவரை வைத்திருப்பதற்கான காரணம் என்ன
