புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2015

சுதந்திரக் கட்சியின் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.தே.கட்சியின் கூட்டணியில்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில்
போட்டியிட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக பிரஜைகள் சக்தி அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பை வெளியிட்டு வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் துமிந்த திஸாநாயக்கவை தவிர ஏனைய அனைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் யானைச் சின்னத்தில் போடடியிட அதிகம் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச அணியை தோற்கடிக்க கூடியளவிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வியாங்கொட குறிப்பிட்டுள்ளார்.
ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க, எம்.கே.டி.எஸ். குணவர்தன, ஆகியோர் ஆரம்பத்தில் இருந்தே ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா , தற்போது தாக்கல் செய்துள்ள வேட்பு மனுக்களை திரும்ப பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.

ad

ad