11 ஜூலை, 2015

PAN AM ஆரம்ப நிகழ்வுகளுக்காக ரொறன்ரோவின் பல வீதிகள் மூடப்படுகின்றன

கனடா ரொறன்ரோவில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ள Pan Am விளையாட்டுக்களுக்கான ஆரம்ப நிகழ்வுகளுக்காக ரொறன்ரோவில்
பல வீதிகள் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்து அதிகாரிகள் பலரும் குறித்த பகுதிகளில் கடமையாற்றுவர் எனவும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாத்திரம் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி போக்குவரத்து பொலிஸாரினால் வெளியிடப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் சிம்கோ தெரு கிழக்குப்பகுதி வீதிகள் மற்றும் மேற்குப் பகுதி வீதிகள், வெலிங்டன் வீதி, நாடாளுமன்ற வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் பலவும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் குறித்த வீதிகளை தவிர்த்து மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.மேலும் Pan Am விளையாட்டுக்களுக்கான பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.