11 ஜூலை, 2015

2ஜி ஊழல்: ரூ10,000 கோடி லஞ்சப் பணம் சென்னை நிறுவனம் மூலமாக வெளிநாட்டுக்கு கடத்தல்– ‘திடுக்’ தகவல்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் தொடர்புடைய நாட்டின் மிகப் பெரிய ஹவாலா நிதி மோசடியை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2ஜி முறைகேட்டில் தொடர்புடைய லஞ்சப் பணம் பல நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடியில் தனியார் வங்கி ஒன்றுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்த சில தனியார் நிறுவனங்கள் அதற்கு பிரதிபலனாக, அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ. ராசாவுக்கு லஞ்சம் வழங்கியதாகவும், இந்தப் பணம் ராசா சார்ந்த திமுக ஆதரவு கலைஞர் தொலைக்காட்சி மூலம் வழங்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.