11 ஜூலை, 2015

அரசியலில் இருந்து விலகினார் ரெஜினோல்ட் குர


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரொஜினோல்ட் குரே அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்துள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடவில்லை எனவும் தேசிய அரசியலில் ஈடுபட தன்னிடம் பண வசதிகள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரெஜினோல்ட் குரே 29 வருடங்கள் அரசியலில் ஈடுபட்டதாக வெறுப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கான சரியான காரணத்தை அவர் வெளியிடவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அதிருப்தியடைந்துள்ளனர். அவர்களில் ரெஜினோல்ட் குரேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது