11 ஜூலை, 2015

மீள் பிரவேசத்திலும் சாதிக்கும் சுவிஸ் வீராங்கனை மாட்டினா கிங்கீஸ் -பெடரரும் யுத்தி ஆட்டத்தில் ஆடுகிறார்


முன்னாள் தரவரிசை ஒன்றாம் இலக்க வீராங்கனையான சுவிஸ் நாட்டை சேர்ந்த மாட்டினா கின்கீஸ் நீண்ட காலத்தின் பின்னர் அண்மையில் மீண்டும் டென்னிஸ் உலகில் நுழைந்துள்ளார் .விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் விம்பிள்டன் சுற்றில் இவர் இந்திய வீரரான லாந்தர் பயசுடன் இணைந்து கலப்பு ஆட்டத்திலும் இந்திய வீராங்கனை சோனியா மிர்சாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் ஆட்டத்திலும் இறுதி ஆட்டம் வரை வந்து சாதிக்கிறார் .தமது ஆக்ரோசமான பலத்தின் மூலம் எதிரிகளுக்கு பலத்த சவாலாக விளங்கும் இந்த ஜோடிகள் கிண்ணத்தை வெல்வார்களா  என பொறுத்திருந்து பார்ப்போம்