புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 ஜூலை, 2015

சுவிஸ் வீராங்கனை மாட்டினா கின்கீஸ் சாதிக்கிறார் இந்திய வீரர்களுடன் இணைந்து

sania, tennis
 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி பைனலுக்கு முன்னேறியது. 
லண்டனில், விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ‘நம்பர்–1’ வீராங்கனை இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி, அமெரிக்காவின் ஜோன்ஸ், அபிகய்ல் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–1 எளிதாக கைப்பற்றிய சானியா ஜோடி, அடுத்த செட்டையும் 6–2 என தன்வசப்படுத்தியது. 56 நிமிடங்கள் முடிவில் சானியா, ஹிங்கிஸ் ஜோடி 6–1, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.

முதல் முறை:
இதன் மூலம் இத்தொடரின் ‘சீனியர்’ பிரிவின் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார் சானியா. இதற்கு முன் (2003) இதே தொடரில் ‘ஜூனியர்’ பெண்கள் இரட்டையரில் ரஷ்யாவின் அலிசாவுடன் இணைந்து பட்டம் வென்றார். 
* கிராண்ட்ஸ்லாம் அரங்கில் இந்த இலக்கை சானியா இரண்டாவது முறையாக எட்டினார். இதற்கு முன் பிரெஞ்ச் (2011) ஓபனில் ரஷ்யாவின் வெஸ்னினாவுடன் இணைந்து பைனல் வரை முன்னேறினார்.
சானியா, ஹிங்கிஸ் ஜோடி இன்று நடக்கும் பைனலில் ரஷ்யாவின் மகரோவா, வெஸ்னினா ஜோடியை சந்திக்கிறது. இதில் சானியா வெல்லும்பட்சத்தில், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் பெண்கள் இரட்டையரில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றலாம். 
ஜோகோவிச், பெடரர் மோதல்:
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ‘நம்பர்–1’ வீரர் செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் 21வது இடத்திலுள்ள பிரான்சின் காஸ்குயட்டை சந்தித்தார். ‘டை–பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை ஜோகோவிச் 7–6 என கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த இரண்டு செட்டையும் 6–4, 6–4 என வென்றார். 2 மணி 21 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் ஜோகோவிச் 7–6, 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வென்று, பைனலுக்கு முன்னேறினார். 
மற்றொரு அரையிறுதியில் ‘நம்பர்–2’ வீரர் சுவிட்சர்லாந்தின் பெடரர், தரவரிசையில் 3வது இடத்திலுள்ள பிரிட்டனின் முர்ரேயை எதிர் கொண்டார். இதில் அபாரமாக ஆடிய பெடரர் முதலிரண்டு செட்டை 7–5, 7–5 என தன்வசப்படுத்தினார். கடைசி செட்டிலும் அசத்திய இவர் 6–4 என கைப்பற்றினார். 2 மணி 6 நிமிட போட்டியின் முடிவில், பெடரர் 7–5, 7–5, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இத்தொடரில் 10வது முறையாக பைனலுக்கு நுழைந்தார். 
பைனலில் பயஸ் ஜோடி
கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பயஸ், சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி 6–3, 6–4 என அமெரிக்காவின் மைக் பிரையன், பெதானியே மேடக் ஜோடியை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. 
நேகல் ஜோடி அசத்தல்:
‘ஜூனியர்’ ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சுமித் நேகல், வியட்நாமின் ஹோயங் ஜோடி 6–2, 6–3 என ஜப்பானின் யுசிகி, யமாஸ்கி ஜோடியை தோற்கடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது.