புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2016

ஐரோப்பாவின் மிகப் பெரிய Le Grand Rex திரையரங்கில் முதல் இந்திய படமாக 'கபாலி'!






கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகி இருக்கும் கபாலி திரைப்படத்தை தணிக்கை செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். 

ஜூலை 15ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இப்படம் பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' திரையரங்கில் திரையிடப்பட இருக்கிறது. ஜூலை 14ம் தேதி திரையிடப்பட இருக்கிறது. சுமார் 2200 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய பிரம்மாண்டமான திரையரங்கம் 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரையரங்கில் திரையிடப்படும் முதல் இந்திய படமாக 'கபாலி' அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

இத்தகவலை 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' திரையரங்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் உள்ள திரையரங்குகளிலேயே 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' தான் மிகவும் பெரியது.

ad

ad