26 ஜூன், 2016

அமைச்சர் பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ச விலக தீர்மானம்?

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் கடுமையாக வெறுப்படைந்துள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருந்து விட்டு, தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக அமைச்சர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விஜயதாச ராஜபக்ச அமைச்சர் பதவியில் இருந்து விலகினால், அது அரசாங்கத்தின் இருப்புக்கு நன்மையளிக்காது என அமைச்சர்கள் சிலர் அரசாங்கத்தின் உயர் மட்ட தரப்பினருக்கு விளக்கியுள்ளதாக தெரியவருகிறது