26 ஜூன், 2016

தாய், 3 மகள்களை கொலை செய்த சின்னராஜ் - போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

சென்னை ராயப்பேட்டை முத்துமுதலி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வாடகைக்கு வசித்து வந்த பாண்டியம்மாள்(வயது 38) மற்றும் அவருடைய 3 மகள்கள் பவித்ரா(19), பரிமளா(18), சினேகா(16) ஆகியோர் கடந்த 23-ந்தேதி அதிகாலை பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.  அவர்களுடைய உடல்கள் நிர்வாணமாக இருந்தது. பாண்டியம்மாளின் 2-வது கணவர் சின்னராஜ் இவர்கள் 4 பேரையும் கொடூரமாக கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சின்னராஜ் கைது செய்யப்பட்டார். 

போலீசாரிடம் சின்னராஜ் அளித்த பகீர் வாக்குமூலத்தில், ‘பாண்டியம்மாளின் 3 மகள்களுடன் செக்ஸ் உறவு வைக்க முயன்றேன். அதை தடுத்ததால் பாண்டியம்மாளையும், உறவுக்கு மறுத்ததால் 3 மகள்களையும் காமவெறியில் அடித்துக் கொலை செய்ததாக தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சின்னராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

சின்னராஜ், பாண்டியம்மாள் மற்றும் 3 மகள்களுடன் செக்ஸ் உறவு வைக்க முயன்றபோது தோல்வி அடைந்ததால் கொலை செய்ததாக கூறி உள்ளார். ஆனால் பாண்டியம்மாளின் மகள்கள் 3 பேரும் பலமுறை கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.


பாண்டியம்மாள் மற்றும் 3 மகள்களுடன் சிறிய வீட்டிலே சின்னராஜ் வசித்து வந்துள்ளார். அம்மாவின் 2-வது கணவர் என்றாலும், அப்பா என்று தான் 3 மகள்களும் சின்னராஜை பாசமாக அழைத்து வந்துள்ளனர்.

சின்னராஜூம் 3 பெண்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தந்து அவர்களிடம் அன்பாக இருந்துள்ளார். நாள்தோறும் சின்னராஜூவிடம் செக்ஸ் உறவில் ஈடுபட்ட வந்த பாண்டியம்மாள் திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சின்னராஜூவுடன் செக்ஸ் உறவுக்கு மறுத்து வந்தார். இந்தநிலையில் சின்னராஜ் மனதில் காமவெறி எழுந்துள்ளது.  அவருடைய பார்வை வயதுக்கு வந்த 3 மகள்கள் மீது திரும்பியது. மகள்கள் குளிப்பதையும், வீட்டில் ஆடைகளை உடுத்தும் காட்சியையும் சின்னராஜ் மறைமுகமாக பார்த்து நீண்ட நாட்களாக ரசித்து வந்துள்ளார். 

நாளடைவில் 3 மகள்களையும் அடைய வேண்டும் என்ற காமத் தீ சின்னராஜ் மனதில் பற்றி எரிய தொடங்கியது. முதலில் மூத்த மகள் பவித்ராவை(19) அடைவதற்காக அவரிடம் இரட்டை அர்த்தங்களிலும், ஆபாசமாக பேசியும் வந்தார். செக்ஸ் தொந்தரவிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுபற்றி பவித்ரா தனது தாயார் பாண்டியம்மாளிடம் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்று கருதிய பாண்டியம்மாள் யாரிடமும் சொல்லாமல், சின்னராஜை கண்டித்தார். இரவு நேரத்தில் சின்னராஜை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தார். இது சின்னராஜூக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 3 மகள்களையும் அடைந்தே தீர வேண்டும் என்று சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் சின்னராஜ் வீட்டுக்குள் வந்தார். 

மூத்த மகள் பவித்ராவை கற்பழிக்க முயற்சித்துள்ளார். அப்போது தடுக்க வந்த பாண்டியம்மாள் தலையில் உலக்கையால் தாக்கியதில், அவர் சுருண்டு விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா, சின்னராஜூவை நகத்தால் கீறி உள்ளார். இதையடுத்து பவித்ராவையும் அவர் உலக்கையால் தாக்கினார். 

அலறல் சத்தம் கேட்டு எழுந்த பரிமளா, சினேகா ஆகிய 2 மகள்களையும் சின்னராஜ் உலக்கையால் தாக்கி உள்ளார். அவர்கள் தட்டு தடுமாறி எழுந்த போது மீண்டும் மீண்டும் தாக்கியதில் அடுத்தடுத்து 4 பேரும் உயிரிழந்தனர்.

காமவெறியில் இருந்த சின்னராஜ் உயிரிழந்த 3 மகள்களின் ஆடைகளையும் களைந்துவிட்டு அவர்களை நிர்வாணமாக்கி உள்ளார். பின்னர் அவர்களை 2 நாட்கள் சின்னராஜ் கற்பழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடல்கள் அழுகிய பின்னரே சின்னராஜ் வெளியே சென்றுள்ளார்.