புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2016

விம்பிள்டன் டென்னிஸ் நாளை தொடக்கம்


கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது. ஜூலை 10-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) விம்பிள்டன் பட்டத்தை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளார். சமீப காலமாக அவரது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. கடைசியாக விளையாடிய 6 கிராண்ட்சிலாமில் 5-ல் வென்று முத்திரை பதித்தார்.

12 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்ற ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைப்பாரா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. 2014 மற்றும் 2015-ல் அவர் இந்த பட்டத்தை வென்று இருந்தார்.

காயம் அடைந்த நடால் விம்பிள்டனிலும் விலகி உள்ளார். இது ஜோகோவிச்சுக்கு பிளஸ்பாயிண்டாக கருதப்படுகிறது. ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) ஆகியோர் ஜோகோவிச்சுக்கு கடும் போட்டியாக இருக்க போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

17 கிராண்ட்சிலாம் வென்ற சாதனை வீரரான பெடரர் 2012-ம் ஆண்டுக்கு பிறகு பட்டம் வென்றது கிடையாது.

பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), 2-வது இடத்தில் இருப்பவரான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), ரட்வன்ஸ்கா (போலந்து), கெர்பர் (ஜெர் மனி), சிமோனா ஹெலப் (ருமேனியா) போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

நடப்பு சாம்பியனான செரீனா 22-வது கிராண்ட்சிலாம் பட்டம் வென்று ஸ்டெபி கிராபின் சாதனையை சமன் செய்யும் ஆர்வத்தில் உள்ளார். அவர் சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபனில் இறுதிப்போட்டியில் முகுருஜாவிடம் தோற்றார். அதற்கு விம்பிள்டனில் பதிலடி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ad

ad