26 ஜூன், 2016

ஒலிம்பிக்கை கலக்கப்போகும் 7 இலங்கையர்கள்

ரியோ ஒலிம்பிக்கை கலக்கப்போகும் 7 இலங்கையர்கள்பிரேசிலில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இலங்கையை சேர்ந்த 7 வீர, வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி ரியோ டி ஜெனிரோவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதில் இலங்கை சார்பில் தடகள விளையாடில் வீர, வீராங்கனைகள் 3 பேரும், நீச்சல் போட்டியில் வீரர்கள் 2 பேரும், துப்பாக்கிச் சூடும் வீரர் ஒருவரும், பூப்பந்து விளையாட்டு வீரர் ஒருவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்படி, அனுருத்த இந்திரஜித் மற்றும் கீதானி ராஜசேகர ஆகியோர் தொலை தூர ஓட்டங்களுக்காகவும், சுமேத ரணசிங்க ஈட்டி எரிதல் போட்டிக்காகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், மெத்திவ் அபேசிங்க மற்றும் கிம்கோ ரஹீம் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளுக்காக தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், பூப்பந்து ஒற்றையர் பிரிவிற்காக நிலுக கருணாரத்னவும் தெரிவு செய்யப்ப