26 ஜூன், 2016

கொழும்பு சுற்றிவளைப்பில் பிரபல நபர்கள் போதைமாத்திரைகளுடன் கைது

இதேவேளை கொழும்பு நகர விடுதி ஒன்றில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி
வளைப்பின்போது, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர்களில், இலங்கையின் பிரபல துணி தயாரிப்பு நிறுவனத்தின் முகாமையாளரும் கொழும்பு சர்வதேச பாடசாலையில் கல்வி பயின்ற ஒருவரும் உள்ளடங்குகிளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கொழும்பு நகரின் விடுதிகளுக்கு அருகாமையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த, தோல்வியடைந்த அரசியல்வாதி ஒருவருக்கு சமீபமான ஒருவரும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரவித்தனர்.
இதேவேளை, போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக வந்த இரு நடன கலைஞர்கள் மற்றும் பிரபல பாடசாலை ஒன்றின்  கூடைப்பந்து பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட 6 நபர்களை விசாரணை செய்வதற்காக கைது செய்தப்பட்டதோடு, அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் மாத்திரமே என விசாரணைகளில் இருந்து தெரியவந்ததை அடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, எஸ்டரசி வகை மாத்திரை ரூபா 3,500 இற்கும் எஸ்.எஸ்.டீ. முத்திரை வகை ரூபா 2,500 இற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது