26 ஜூன், 2016

பிரிட்டனுக்கும் இங்கிலாந்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?

ண்மையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியது. பெரும்பாலான மக்களுக்கு பிரிட்டன் என்றால் இங்கிலாந்துதான் நினைவுக்கு வரும். ஆனால் பிரிட்டன் என்பது இங்கிலாந்து மட்டுமல்ல, மேலும் 3 நாடுகளை உள்ளடக்கியது.
           
வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்துதான் கிரேட் பிரிட்டன்.
இதன் முழு பெயர் 'யுனைடெட் கிங்டம் ஆப் கிரேட் பிரிட்டன் அண்டு நார்தர்ன் அயர்லாந்து' என்பது. பிரிட்டனையும் அதன் முழுமையான புவியியல் அமைப்பையும் புரிந்து கொள்ள இந்த வீடியோ உதவும்.ஐரோப்பிய யூனியனில் கடந்த 43 வருடங்களால் பிரிட்டன் இருந்து வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்தான் அதில் இருந்து பிரிட்டன் விலகியது. இந்நிலையில் வாக்கெடுப்புக்கு இரு நாட்களுக்கு முன்தான் இங்கிலாந்து மக்களில் அனேகம் பேர், ஐரோப்பிய யூனியன் என்றால் என்ன?  என்று கூகுளில் தேடியுள்ளார். மேலும் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகினால் என்ன நடக்கும்? என்றும் அதிகம் பேர் தேடியுள்ளனர்.