புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2013

கொழும்பில் தமிழ்ப் பெண்களின் நடையை நாடாளுமன்றில் வர்ணித்த அஸ்வர் எம்.பி
கொழும்பில் அழகான தமிழ்ப் பெண்கள் ஒய்யார நடை போட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும் என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோர் நாளை யாழ். விஜயம்! திங்கள் வேட்புமனு தாக்கல் செய்வர்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சமபந்தன், வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பு இந்திய தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 22 ஆம் திகதி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கந்தர் மடத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஆசிரியரே பொலிசாரால் கைதுசெய்யப்பட்டவராவார்.

26 ஜூலை, 2013

நாட்டுமக்களையும் அரசியல்வாதிகளையும் ஏமாற்றி தந்திரமான அரசியலில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வலையில் தற்போது தயாசிறி விழுந்துவிட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

ராஜகிரியவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த மாணவியொருவர் நேற்று தனது வீட்டு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் தெரிவிக்கையில்,

வவுனியா நகரில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் சுவர்களை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருக்கின்றது.
செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணியளவில் சுவரை உடைத்துக் கொண்டு சென்ற கொள்ளையர்கள் அதிகாலை 3 மணிவரையில் உள்ளே இருந்ததாக பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச்

சிறுபான்மை தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

25 ஜூலை, 2013

புங்குடுதீவை சேர்ந்த யாழ் பல்கலை கழக ஒன்றிய செயலாளரான கடந்த வருட இறுதியில் இராணுவத்தினால்கைதுச் செய்யப்பட்டு  விடுதலையான  மாணவன் பரமலிங்கம் தர்சனானந்  வட மாகான சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ளார்  .முதற்கண் இவரை  வாழ்த்தி வரவேற்போம் இவரது வெற்றிக்காக உழைப்போம் நண்பர்களே 



             ""ஹலோ தலைவரே... முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் பங்கேற்று எழுதியிருக்காங்க.''…


          காவியக் கவிஞன் வாலியின் திடீர் மரணம், இலக்கிய உலகிற்கும் திரை இசை உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பையும் வலியையும் தந்திருக்கிறது. அதேசமயம், தமிழறி ஞர்கள்,
இலங்கை தமிழர் விவகாரம் : ஜெயலலிதாவுக்கு மன்மோகன்சிங் பதில் கடிதம்
இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழர்களின் நலனைக் காக்க மத்திய அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் எழுதியுள்ள பதில்
ஸ்பெயினில் ரயில் விபத்து : பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு
வடக்கு ஸ்பெயினில் உள்ள கலிசியாவில் ரெயி

23 ஜூலை, 2013

தமிழீழ உணர்வாளர் 'ஈழத்துணை திரு.அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு
தாய்த்தமிழகமாம் திண்டுக்கல் மாவட்டத்தில் M.R.F நகரில் வசிக்கும் தமிழீழ உணர்வாளர் 'ஈழத்துணை திரு.அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு உலகதமிழர் பேரமைப்பின் கொடி அணிவித்து பொதுமக்களின் இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது.
யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை
தரித்து நின்ற வாகனத்தை அடித்து சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவக இளைஞர் அணித் தலைவரும் மாநாகர சபையின் முன்னாள் உறுப்பினருமான நிசாந்தன் சற்றுமுன் யாழ். நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
யாழில் பேரூந்துக்காக காத்து நின்ற இளம் பெண்ணை முத்தமிட்ட முதியவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு
யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இளம் பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டதுடன் அப்பெண்ணை முத்தமிட்ட முதியவரை இங்கு கூடியிருந்தவர்கள் அடி உதை கொடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், ஆசனப் பங்கீடுகள் விபரம்!
வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.
கொழும்பில் மினி சூறாவளி: பல வீடுகள், வாகனங்கள் சேதம் - ஒருவர் பலி
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
டி சேரம், தேசிய வைத்தியசாலை, கிருலப்பனை மற்றும் தெமடகொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மின்சார தடையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நடிகை மஞ்சுளாவுக்கு திரையுலகம் அஞ்சலி
 


நடிகை மஞ்சுளா(வயது 60)  சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று(23.7.2013) மரணம் அடைந்தார்.
வடக்குத் தேர்தல் வர­லாற்று திருப்­பு­முனை வெற்­றி­யாக அமைய வேண்டும் : சம்பந்தன் எம்.பி. 
news
 சர்வதேசத்தின் நிலைப்பாட்டை அறிந்தே தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்பின் வட­மா­காண சபை முத­ல­மைச்சர் வேட்­பாளர் தெரிவு இடம்­பெற்­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கே சர்­வ­தே­சத்தின் ஆத­ரவும் மக்­களின் அங்­கீ­கா­ரமும் கிடைத்துள்­ளன. எனவே, எந்த விலை கொடுத்­தா­வது கூட்­ட­மைப்பை பாது­காக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். வட மாகாண சபைத் தேர்தல் வர­லாற்று திருப்­பு­முனை வெற்­றி­யாக அமைய வேண்டும்.

ad

ad