புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2013




             ""ஹலோ தலைவரே... முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் பங்கேற்று எழுதியிருக்காங்க.''…

""அரசாங்க வேலைக்கு இப்பவும் மதிப்பு கூடிக்கிட்டிருக்கு. அதனாலதான் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இத்தனை மதிப்பு. அதுபோல ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் கடும் போட்டி. மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்விச் சட்டத்துனால ஆசிரியர் பயிற்சி முடிச்சவங்களெல்லாம் தகுதித்தேர்வு எழுதித்தான்  செலக்ட் ஆக வேண்டியிருக் குது. இந்தத் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட் டைக் கடைப்பிடிக்காமல் ஜெ. அரசு ஏமாற்றுவதா தி.மு.க., தி.க., கல்வியாளர்கள் எல்லோரும் குரல் கொடுத்துக்கிட்டிருக்காங்க.''

""அதெல்லாம் இருக்கட்டும்ங்க தலைவரே.. .. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துன இந்த முதுநிலை  பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பா அ.தி.மு.க தரப்பில் என்ன நடக்குதுன்னு சொல்றேன். ஆசிரியர் வேலை கிடைக்கணும்னா 7 எல் முதல் 10 எல் வரை கவனிச்சாகணும்னு அ.தி.மு.க மா.செக்கள், எம்.எல்.ஏக்களெல்லாம் கலெக்ஷனில் இறங்கிட்டாங்க. பணம் கொடுத்தாதான் பாஸே ஆகமுடி யும்ங்கிற அளவுக்கு இந்த விவ காரம் பற்றி எரிஞ்சிக்கிட்டிருக் குது. அதனால, ஆசிரியர் வேலையை எதிர்பார்க்கிற பலரும் அவங்கவங்க மாவட் டத்தில் உள்ள அ.தி.மு.க மா.செ.க்களையும் எம்.எல்.ஏக் களையும் வெயிட்டா கவனிச்சிக்கிட்டிருக்காங்க.'' 

""இதையெல்லாம் கவனிக்கவேண்டியவங்க கவனிச்சி, உரிய நடவடிக்கை எடுக்கணுமே!''


""கவனிக்கணும்னு சொன்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருதுங்க தலைவரே.. என்.எல்.சி.யில் தமிழக அரசின் பங்குங்கிற காமராஜரின் கனவை ஜெ. நிறைவேற்றியதா நியூஸ் ஒளிபரப்பியதற்காக, ஜெயா டி.வியில் நியூஸ் எடிட்டரா இருந்த தில்லைங் கிறவரை திடுதிப்புன்னு வேலையை விட்டுத் தூக்கி யதைப் பற்றி நாமதானே ஏற்கனவே பேசியிருந்தோம்.. .. .. இப்ப ஜெயா டி.வி. ஆபீஸ் வாசலில் எந்த கார் வந்து நின்றாலும் ஊழியர்கள் மிரண்டு போயிடுறாங்க.''



""ஏன்?''

""காரிலிருந்து இரண்டு பேர் இறங்குறாங்களாம். நேரா உள்ளே வந்து, குறிப்பிட்ட ஊழியர்களைக் கூப்பிட்டு, ரெடியா கொண்டு வந்திருக்கிற ராஜினாமா லெட்டரில் கையெழுத்து வாங்கிட்டு, ஒரு மாச சம்பளத்தை உடனடியா செட்டில் பண்ணி வீட்டுக்கு அனுப்பிடுறாங்களாம். உடல் நிலை சரியில்லை, வேலை யில் தொடர விருப்பமில்லைன்னு ராஜினாமாவுக்கான காரணங்களையும் அவங்களே விதவிதமா எழுதிக்கிறாங் களாம். இதனால, ஜெயா டி.வி.யின் சீனியர் ஊழியர்கள் கூட தங்களோட சீட்டு கிழிஞ்சிபோயிடுமோன்னு மிரண்டு போயிருக்காங்க. ஊழியர்கள் பற்றிய தகவல் களைப் போட்டுக் கொடுக்கிறது ராஜன், செந்தில் வேலன்னு இரண்டுபேர்தானாம். எந்த ஊழியர் பற்றியா வது புகார் தெரிவிச்சி கடிதம் வந்தால், அதை சங்கர்ங்கிறவர் மூலமா சசிகலா பார்வைக்கு அனுப்பி வச்சிடுறாங்களாம்''. 

""சசிகலாவுக்கா?''


""ஆமா… அவர்தான் இப்ப ஜெயா டி.வி. நிர்வாகத்தைப் பார்த்துக்கிறாரு. அதனால லெட்டரெல்லாம் அவர் கவனத்துக்குத்தான் போகுது. அதற்கப்புறம்தான், காரிலிருந்து ஆட்கள் இறங்கிவந்து, ரெடியா இருக்கிற ராஜினாமா லெட்டரில் கையெழுத்து வாங்குறாங்க. சட்டம்-நடை முறை எதுவும் கடைப்பிடிக்கப் படுறதில்லையாம். தனக்கும் ஜெயா டி.விக்கும் சம்பந்த மில்லைன்னு ஜெ. ஏற்கனவே சொல்லிட்டாரு. ஆனா, அவர் பெயரோடும் அவர் கட்சி சின்னமான இரட்டை இலையோடும் ஒளிபரப்பாகும் ஜெயா டி.வி.யில் நடக்கும் தொழிலாளர் விரோத போக்குகளை யார் தட்டிக் கேட்கப் போறாங்கன்னு தெரியலைன்னு அங்கே இருக்கும் ஊழியர்கள் புலம்புறாங்க.''

""தர்மபுரி இளவரசன் மரணம் தொடர்பா பா.ம.கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிக்கை விட்டு மோதிக்கிறாங்களே.''…


""இளவரசன் தற் கொலைன்னு ரிப்போர்ட் வந்ததும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்கிட்டேயிருந்துதான் முதல் அறிக்கை வந்தது. அதில், இளவரசன் மரணத் துக்கு பா.ம.கதான் காரணம்னு சொன்ன இயக்கத்தினர், இப்ப என்ன சொல்லப்போகிறார் கள்னும், இளவரசன் தற்கொலை மனநிலையில் இருப்பதை அறிந்தும் அவர்கள் ஏன் காப்பாற்ற முயற்சிக்கவில்லைன்னும் கேட்டிருந்தார். இதற்குப் பதில் அறிக்கை கொடுத்தவர் சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். இளவர சனுக்கும் திவ்யா அப்பா நாகராஜனுக்கும் நேர்ந்தது இயற்கை மரணமல்லன்னும் அது கௌரவக் கொலைன்னும் பா.ம.கவை குற்றம் சாட்டி அறிக்கை கொடுத்திருந்தார்.''

""ஜி.ரா.வுக்குப் பதிலுக்குப்பதில்னு பா.ம.க கோ.க.மணி அறிக்கை கொடுத் திருந்தாரே…?''


""ஆமாங்க தலைவரே.. .. திவ்யாவோட அப்பா நாகராஜன் இறந்தப்ப இரங்கல் அறிக்கைகூட கொடுக்காத சி.பி.எம் கட்சியினர், இப்ப நாகராஜனும் இளவரசனும் கௌரவக் கொலை செய்யப்பட்டிருப்பதா அறிக்கை விடுவது அருவருக்கத்தக்க அரசியல்னு விமர்சித்த கோ.க.மணி, மரணங்கள் இயற்கையாக நிகழாத போது அதற்கு காரணமானவர்கள் தான் குற்றவாளிகள்னு ஜி.ரா சொல்வதன் அடிப்படையில் பார்த்தால், சி.பி.எம்மின் உட்கட்சி பதவிச்சண்டை காரணமாக அவதூறான பழிகளுக்குள்ளாகி, கட்சியின் விசாரணை அறிக்கை எனும் பேரால் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட டபிள்யூ.ஆர்.வரதராஜன் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் யார் என்பதை ஜி.ராமகிருஷ்ணன் அடையாளம் காட்டுவாரான்னு கேட்டிருக்காரு.'' 

""இரண்டு தரப்பிலிருந்தும் அறிக்கைகள் சீறிப் பாயுது. அடுத்த மேட்டரை சொல்லுப்பா.''



""நான் சொல்றேன்... மதுரையில அழகர் கோயிலிலிருந்து, சாமியை ஆடி 1-ந் தேதி கீழே இறக்கிட்டு மேலே கொண்டு போவது வழக்கம். இந்த வருசமும் அப்படித்தான்  செஞ்சாங்க. ஆனா, அழகர் கீழே  இறக்கும்போது சாமி திடீர்னு விழுந்திருச்சி. இப்படி நடந்தால், ஆட்சிக்கு ஆபத்துன்னு ஐதீகம் இருக்குது. கோயில் நிர்வாகம் பதறிப்போயிடிச்சி. பத்திரமா திரும்பவும் மேல ஏத்திடுவோம்னு முயற்சித்தப்ப, அப்பவும் சாமி  கீழே  சாய்ஞ்சிருச்சி. இது அபசகுனம்னு மேலிடத்துக்குத் தகவல் போக, இணை ஆணையர் மூலமா சாமியைத்  தூக்கிய 18 பேரை வேலைநீக்கம் பண்ணிட்டாங்க. இவங்க பரம்பரையா சாமி தூக்குறவங்களாம். அபசகுனம் மாறுவதற்கான பரிகார பூஜைகள் செய்வதற்கும் ஏற்பாடுகள் நடந்துக்கிட்டிருக்கு. பதை பதைப்பு இன்னும் குறையலையாம்.''

ad

ad