புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2013

சிறுபான்மை தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் இலங்கையின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 14ஆம் திகதி பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த பதில் கடிதத்தை இந்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் அரசியல் அதிகாரப்பகிர்வு மற்றும் நல்லிணக்க விடயத்தில், இந்திய அரசின் நிலைப்பாட்டில் நிச்சயமாக எந்த மாற்றமும் இல்லை.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் குறிப்பாக, தமிழர்கள் தமது நிலையை தாமே தீர்மானிப்பதை உறுதிப்படுத்துவதற்கு புதுடில்லி நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது.
இந்த நோக்கத்தை எட்டும் வரை தொடர்ந்து நாம் பணியாற்றுவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad