புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

    சிம்புவுடன் ஹன்சிகா: பேஸ்புக்கில் வெளியான புகைப்படங்கள்

நடிகை ஹன்சிகா, சிம்புவுடன் இருக்கும் புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
தமிழ் திரை உலகின் புதிய காதல் ஜோடியாக சிம்பு- ஹன்சிகா ஆகிய இருவரும் வலம் வருகின்றனர். இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். இதனிடையே அண்மையில் ஹன்சிகா தனது 22வது பிறந்த நாளை கொண்டாடினார். அதில் ஹன்சிகாவை 'இளவரசி' என்றெல்லாம் வர்ணித்திருந்தார் சிம்பு. இந்நிலையில் ஹன்சிகா தமது பேஸ்புக் பக்கத்தில் சிம்புவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
அந்தப் புகைப்படங்களில் சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்தபடி இருக்கிறார்கள். புகைப்படங்கள் அனைத்தும் பார்ட்டி ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சிம்புவும்-நயன்தாராவும் காதலித்து பின்பு பிரிந்தது நினைவிருக்கலாம். அவர்களின் காதலில் விரிசல் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் இணையதளத்தில் வெளியான அந்த புகைப்படங்கள்தான்.

ad

ad