புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

தம்புள்ளை காளி கோவில் மீதான தாக்குதல் புத்தபெருமானின் போதனைக்கு மாறானது : வேலாயுதம் கண்டனம்

இன மத வாதங்களைத் துௗண்டாது நாட்டு மக்களின் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ கூறிய சி
ல நாட்களிலேயே இந்து மக்களின் மனதைப் புண்படுத்தக்கூடிய ரீதியில் மதவாதப் பேரினவாத சக்திகள் தம்புள்ளையில் உள்ள காளி கோவிலை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த தங்கத்தினால் செய்யப்பட்ட தாளிக்கொடியையும் திருடிச்சென்றிருப்பது மிக மோசமான அநாகரிகமான புத்த பெருமானின் போதனைக்கு மாறான செயலென ஐக்கிய தேசிய கட்சியின் உதவித் தவிசாளரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான கே. வேலாயுதம் தனது கண்டண அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பௌத்த தர்மத்தினை இலங்கை சனத்தொகையில் பெரும்பான்மை மக்கள் கடைபிடித்து வருகின்றார்கள். இந்துக்கள் மாத்திரமின்றி கணிசமான சிங்கள மக்களும் பயபக்தியோடு காளியம்மன் வழிபாடுகளில் இலங்கையில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் தம்புள்ளையில் நடத்தப்பட்ட இச்சம்பவம் தமிழ் மக்களை மாத்திரமின்றி உண்மையான சமத்துவத்தையும் சர்வமத போதனைகளையும் அனுஷ்டிக்கின்ற நாகரீக உலகின் எந்தவொரு மக்களும் அனுமதிக்கமாட்டார்கள்.

கடந்த சில காலங்கலாகவே மத ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டு வடகிழக்கில் பல்வேறு இடங்களில் பௌத்த விகாரைகள் விக்கிரகங்கள் திடீர் திடீரென அமைக்கப்பட்டும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பகிரங்கமாக அகற்றப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. அதேபோன்று அண்மையில் தெஹிவளை தற்போது தம்புள்ளை போன்ற பல இடங்களில் பேரினவாத சமூக விரோத சக்திகளின் அடாவடித்தனம் தலைவிரித்தாடுகின்றது.

கடவுளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் எவ்வாறு தேசிய உணர்வோடு நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்று கூறுகின்ற ஜனாதிபதியின் கூற்றுக்கு ஒப்ப சமத்துவமாகவும் சகோதரத்துடனும் வாழ முடியும்.
பாராளுமன்றத்திலே அரசுக்கு கூஜா தூக்கிக் கொண்டிருக்கின்ற மலையகம் உட்பட ஏனைய தமிழ் இஸ்லாமிய உறுப்பினர்கள் அற்பசொற்ப சலுகைகளுக்காக தமது சமூகத்தை காட்டிக்கொடுக்காது இவ்வாறான செயல்களுக்கு எதிராக குரல் கொடுத்து அரசின் அறியாமைக்கண்களை திறக்க முன்வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad