புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

ஐ.நா.வின் குற்றச்சாட்டுகள் புலிகளின் நிழல்கள் வழங்கிய சாட்சிகளேயாகும் : ஜீ.எல்.பீரிஸ்

ஐ.நா. நிபுணர் குழு மற்றும் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விடுதலைப்புலி பயங்கரவாதிகளின் நிழல்கள் வழங்கிய சாட்சிகளாகவே காணப்படுகின்றன. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் இடம்பெறும் ஒரே நாடு இலங்கை தான்.


இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எவ்வாறு இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான வெளிப்பாடுகள் காணப்படுவதாக கூறமுடியும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் முழு அளவில் சிவில் நிர்வாகத்திற்குள் குறுகிய காலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழர்கள் சுவாசிக்கும் சமாதான காற்றை மீண்டும் சீரழிக்க புலி பயங்கரவாத குழுக்கள் சர்வதேசத்தில் இருந்து கொண்டு செயற்படுகின்றனர். இக்குழுக்கள் வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளதுடன் மேற்குலக நாடுகளில் பெரும் பொருளாதார மற்றும் அரசியல் சக்திகளாகவும் புலிகளின் வலையமைப்பு காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச பாதுகாப்பு செயலமர்வின் இண்டாவது நாள் நேற்று தலதாரி ஹோட்டலில் நடைபெற்றபோது உறையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

ad

ad