தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு குரல் கொடுக்கும் கலைஞர்கள்
தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்கள அரசு வட தமிழீழ தாயகத் தமிழர்கள் மீது திணித்துள்ள வட மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக தாயகத்திலு
ம் புலத்திலும் உள்ள கலைஞர் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தாயகப் பாடகராக அன்று விடுதலைப்பாடல்கள் ஊடாக புகழ்பூத்திருந்த எழுச்சிப்பாடகர் சாந்தன் அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரப் பாடலை பாடியிருப்பதோடு கூட்டமைப்பின் பிரச்சார மேடைகளில் எழுச்சி முழக்கமிட்டு வருகின்றார்.
இந்நிலையில் பிரான்ஸ் தமிழ்சமூகப் பரப்பின் பிரபலபல பாடகர் மயிலையூர் இந்திரன் அவர்களும் குரல் கொடுத்துள்ளார்.
கலைஞர்களுக்கு அரசியல் வேண்டாம் என்ற ஒருசிலரது குரல்களையும் தாண்டி , தமிழ்த்தேசியத்துக்கான பங்களிப்பினை கலைஞர்கள் ஆற்றிவருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
