புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

இஸ்மாயிலின் வீட்டுக்கு புகுந்த குழு தங்கத்தை கொள்ளையிடுவதற்கு இங்கு வந்ததா? கிரிஸ் தொடர்பான ஆவணங்களைத் தேடி வந்ததா?: ரணில்

சண்டே லீடர் பத்திரிகையின் இணை ஆசிரியர் மந்தனா இஸ்மாயிலின் வீட்டுக்கு புகுந்த குழு தங்கத்தை கொள்ளையிடுவதற்கு இங்கு வந்ததா அல்லது கிரிஸ் தொடர்பான
ஆவணங்களைத் தேடி வந்ததா? கொள்ளையிட வந்த குழு மூன்று மணி நேரம் தங்கியிருப்பதற்கான காரணம் என்ன என்று எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின்போது நிலையியற் கட்டளை 23 (2) இன் கீழ் கேள்வி தொடுத்து பேசுகையிலேயே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் கூறுகையில், 2013 ஆகஸ்ட் 24ஆம் திகதி அதிகாலை சண்டே லீடர் பத்திரிகையின் இணை ஆசிரியர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்கிரமவின் வீட்டுக்குள் புகுந்த குழுவொன்று அவரை தாக்கி அச்சுறுத்தியதுடன் சுமார் மூன்று மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்துள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் மேற்படி குழுவில் ஒருவர் தொடர்ச்சியாக கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டவாறு சோதனைகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ad

ad