சிம்புவுடன் ஹன்சிகா: பேஸ்புக்கில் வெளியான புகைப்படங்கள்
நடிகை ஹன்சிகா, சிம்புவுடன் இருக்கும் புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
அந்தப் புகைப்படங்களில் சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்தபடி இருக்கிறார்கள். புகைப்படங்கள் அனைத்தும் பார்ட்டி ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சிம்புவும்-நயன்தாராவும் காதலித்து பின்பு பிரிந்தது நினைவிருக்கலாம். அவர்களின் காதலில் விரிசல் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் இணையதளத்தில் வெளியான அந்த புகைப்படங்கள்தான்.