புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

அமைச்சரவையில் இருந்து வைகைச் செல்வன் நீக்கம்! கட்சிப் பதவியும் பறிப்பு!
    மிழக அமைச்சரவையில் இருந்து வைகைச் செல்வன் நீக்கம் செய்யப்பட்டார். 
பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த வைகைச்செல்வன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், அமைச்சர் பழனியப்பன் பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார். 


முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் வைகைச் செல்வன் விடுவிடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தையொட்டி சிறந்த ஆசியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த விழாவில் வைகைச்செல்வன் கலந்துகொள்ளவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கலந்துகொண்டார். 
அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ.,வான வைகைச்செல்வன் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதுவரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் 3 முறை மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு சி.வி.சண்முகம், என்.ஆர்.சிவபதி ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து நீக்கப்பட்டனர். 
மேலும், இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் வைகைச் செல்வன் நீக்கப்பட்டுள்ளார் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ad

ad