புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2013

ஆளும் தரப்பின் எடுபிடிகளாக பொலிஸ்! கூட்டமைப்பு வேட்பாளரை கொலை செய்ய முற்பட்ட பொலிஸ் அதிகாரி!

யாழ்.பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சமன்சிகாரா தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை வேட்பாளர் தம்பிராசா.
குற்றஞ்சாட்டியுள்ளார்.யாழ்.நகரப்பகுதியினில் தன் மீது நடத்தப்பட்ட சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களது தாக்குதல் பற்றி நியாயம் கேட்கச்சென்றிருந்த வேளையினிலேயே தன்னை கொலை செய்ய அவர் முயற்சித்ததாக தம்பிராசா மேலும்

ஆனந்திக்காக அதிர்ந்த வீரசிங்கம் மண்டபம்!!

யாழ்ப்பாணத்தினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெறப்போகும் ஆசனங்களே அறுதிப்பெரும்பான்மையின்மையினை பெற்று ஆட்சி அமைக்க முடியுமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும்.ஆனாலும் இதை செய்ய

26 ஆக., 2013

முள்ளிவாய்க்காலில் முகாம்களை அவசரமாக அகற்றிய படையினர்: நவிப்பிள்ளை வருகையின் எதிரொலி?

இறுதிக்கட்டச் சமர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களை முற்றாக அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக மிகத்
ஐ.நா. அலுவலகம் முன்பாக “இராவணபலய’ ஆர்ப்பாட்டம்; பொலிஸாருடன் முறுகல் 
ஐ.நா. உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து
இலங்கையில் யுத்தம் முடிந்தும் பயங்கரவாதச் சட்டம் ஏன் இருக்கிறது; ஹக்கீமிடம் நவிப்பிள்ளை கேள்வி 
தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருக்கின்றது அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை தொடர்பிலும் ஐ.நா மனித உரிமையாளர்  கேட்டறிந்தார் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சோனியாகாந்தி
மருத்துவமனையில் அனுமதி
 

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  நேற்று இரவு முதல் சோனியாவுக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.  
யாழ் நகரில் தடம் பதித்தார் நவநீதம்பிள்ளை! நாளை கிளிநொச்சிக்கு பயணம்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். 

விசேட விமானத்தின் மூலமாக யாழ் சென்ற ஆணையாளர் 7.00 மணியளவில் தரையிறங்கினார்.
விமானம் மூலம் பலாலி வந்தடைந்த அவர் இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

’தலைவா’ படத்தயாரிப்பாளர் மிரட்டல் :
 சத்யராஜ் பட இயக்குநர் கமிஷனரிடம் பரபரப்பு புகார்
 

‘உளவுத்துறை’, ‘ஜனனம்’ போன்ற படங்களை இயக்கியிருப்பவர் ரமேஷ் செல்வன். தற்போது சத்யராஜ் நடிப்பில் ‘கலவரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை கமிஷனர் அலுவலக த்தில் ‘தலைவா’ திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். 


               சுஜூத் சர்க்கார் இயக்கிய ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ள "மெட்ராஸ் கஃபே' என்ற ஹிந்தி திரைப்படத்தை சென்னையில் வெளியிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் தேசிய அமைப்புகளும் ஈழ ஆதரவு அமைப்புகளும் மிகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றன. கலைஞர், வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் படத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 




         ""ஹலோ தலைவரே... கொடநாட்டிலிருந்து  ஜெ. ரிட்டன் ஆன பிறகு எந்த மந்திரிக்குப் பதவி பறிபோகுமோன்னு 32 மந்திரிகளும் திக்..திக் மனநிலை யோடுதான் இருந்தாங்க. ஒருத்தரையொருத்தர் சந்திச்சிக் கிட்டாக்கூட இதைப் பற்றித்தான் பேசிக்கிட்டாங்க. இப்பவும்கூட மந்திரிசபை மாற்றம் பற்றிய தகவல்கள் வந்துக்கிட்டேதான் இருக்குது. ஆனாலும், மந்திரிகள் பலரும் இப்ப பதவி பறிப்பு பயமில்லாம ஓரளவு தைரியமாத்தான் இருக்காங்க. சக மந்திரிகள்கிட்டே பேசுறப்ப, மேலிடம் முன்னே மாதிரி கோபப்படுறதில்லை.. கோபப்பட்டாலும் பதவியைப் பறிக்கிறதில்லைன்னு சொல்றாங்க.''



               89405 55555 -இது ஒரு சாதாரண அலைபேசி நம்பர்தான். ஆனால் இந்த நம்பர் ஒரு மினிஸ்டரின் அரசியல் வாழ்க்கையையே சர்ச்சைக்குரியதாக்கியிருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ... ஆனால் அதுதான் நிஜம்.
தமிழ் மக்களின் தேசிய கடமை
30 வருடங்களாக இந்த நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. போர்ச் சூழல் முற்றாகவே நீங்கி சமாதானமும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் உருவாக்கப்பட்டுவிட்டது.
 யாழ்ப்பாணத்தில் த.தே.கூவின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும் 
வடமாகாண சபைத் தேர்தக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்  யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இலங்கையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் போன்ற சம்பந்திகள் போல் ஆயிரக்கணக்கில் உருவாக வேண்டும். அப்போது தான் இன மத தீவிரவாதம் தகர்த்தெறியப்படும் நல்லுறவு நிலவும்.
இவ்வாறு கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் சனியன்று இடம்பெற்ற சர்வமத தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய நுவரெலியா மாவட்டம் சார்பில் பேசிய வண. குசலஞான தேரர் தெரிவித்தார்.


மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின்
கருத்துக்களம் : வைகோ பேச்சு

 

 மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்களம் ஈரோட்டில் இன்று காலை 10மணிக்கு சக்தி திருமண மண்டபத்தில்  தொடங்கியது.   மாலை 5 மணிக்கு தலைவர் வைகோ உறை ஆற்றினார் 
சென்னை : 3 இலங்கைத்தமிழர்கள் கைது
சென்னை பூந்தமல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த3 பேர் கைது செய்யப்பட்டனர்.   திறந்தவெளி முகாமுக்கு மாற்றக்கோரி சந்திரகுமார் 10 நாளகாக உண்ணாவிரத இருந்தார்.  கிருஷ்ணமூர்த்தி 9வது நாள், மகேஸ்வரன் 5 நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.  தற்கொலைக்கு முயன்றதாக  3 பேரையும் கைது செய்து புழல் சிறையில்  அடைத்தது போலீஸ்.
இலங்கை அகதிகள் குழந்தைகளின் உயர்கல்விக்கு நான் உதவுகிறேன் :
 நடிகர் கருணாஸ் உத்தரவாதம்
சேலத்தில் அகில இந்திய தேவர் பேரவை சார்பாக பெரியார் பல்கலை கழக துணை வேந்தர் டாக்டர் கி.முத்து செழியனுக்கு பாராட்டு விழா ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஏற்பாடு  செய்தனர்.

25 ஆக., 2013

Australia 492/9d
England 247/4 (116.0 ov)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான வடமராட்சி பிரதேச சபை உபதலைவர் இ. சாந்தசொரூபன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உபதலைவர் எம். லோகசிங்கம் ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்துவப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டனர். அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, அதாவுத செனவிரட்ண ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம்
.
மும்பையில் கடந்த 22-ம் தேதி இரவு புகைப்பட பெண் பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் குற்றவாளி சந்த் ஷாயிக்கை போலீசார் கைது செய்தனர்.

அதன்பின்னர் விஜய் ஜாதவ் என்ற குற்றவாளி நேற்று காலையில் பிடிபட்டான். அவர்கள் இருவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், போலீசாரால் தேடப்படும் நபர்களில் 3-வது நபரான சிராஜ் ரஹ்மான் நேற்று மாலை கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரின் உடல்நிலை தேறி வருகிறது. 

போலீசாரிடம் அந்த பெண் பரபரப்பு வாக்குமூலம அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாவது:-

‘மும்பை மகாலக்ஷ்மி ரெயில் நிலையம் அருகே உள்ள சக்தி மில்லிற்கு நானும் எனது சகப்பணியாளரும் சம்பவத்தன்று மாலை 5.30 மணியளவில் புகைப்படம் எடுப்பதற்காக சென்றோம்.

அப்போது மில்லின் உள்ளே இருந்து வந்த 2 பேர் இந்தப் பாதை வழியாக போக வேண்டாம். வேறு நல்ல பாதை வழியாக அழைத்துச் செல்கிறோம் என்று கூறி அழைத்துச் சென்றனர்.

நாங்கள் புகைப்படம் எடுக்கும் வேலையில் மும்முரமாக இருந்தபோது உள்ளே வந்த 3-வது நபர் தன்னை ரெயில்வே ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"எங்கள் முதலாளிக்கு தெரியாமல் நீங்கள் இந்த மில்லை புகைப்படம் எடுப்பதை அவர் அறிந்து கொண்டார். உங்களை அழைத்து வரச் சொன்னார்" என்று அந்த நபர் எங்களை மிரட்டினார்.

உங்கள் முதலாளியிடம் போனில் பேசுகிறேன் என்று நான் கூறினேன். அதற்கு மறுத்த அந்நபர் தன்னுடன் வரும்படி எங்களை மீண்டும் மிரட்டினார். உடனடியாக எங்கள் பத்திரிகையின் தலைமை புகைப்பட கலைஞரை நான் செல்போனில் தொடர்பு கொண்டேன்.

அவரது லைன் ‘பிஸி’யாக இருந்தது. சற்று நேரத்தில் எனது செல்போனை மீண்டும் அவர் தொடர்பு கொண்டார். ரெயில்வே ஊழியர் என்று கூறி எங்களை ஒருவர் மிரட்டுவதாக நான் தெரிவித்தேன். உடனடியாக அந்த இடத்தை விட்டு வந்துவிடும்படி அவர் கூறினார்.

நாங்கள் இருவரும் வெளிவாசல் வழியாக வர முயன்ற போது குற்றவாளிகளில் ஒருவன் எங்களை வழிமறித்து தடுத்தான்.

சில நாட்களுக்கு முன்னர் அந்த இடத்தில் ஒரு கொலை நடந்ததாகவும் என்னுடன் வந்த சகப்பணியாளர்தான் அந்த கொலையை செய்ததாக கூறி அவன் எங்களை மிரட்டினான். அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எங்களை மில்லின் உள்பக்கத்திற்கு இழுத்துச் சென்றனர்.

பாழடைந்த கட்டிடத்தில் நடந்தது என்ன ? கற்பழிக்கப்பட்ட மும்பை பெண் ‘போட்டோகிராபர்’ பரபரப்பு வாக்குமூலம்
எங்களை விட்டுவிடும் படி நாங்கள் கெஞ்சினோம். எங்களிடம் இருந்த கேமராவையும் 2 செல்போன்களையும் ( ஒவ்வொன்றும் சுமார் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ளது) தந்து விடுவதாகவும் நாங்கள் கூறினோம்.

ad

ad