புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2013

இலங்கை அகதிகள் குழந்தைகளின் உயர்கல்விக்கு நான் உதவுகிறேன் :
 நடிகர் கருணாஸ் உத்தரவாதம்
சேலத்தில் அகில இந்திய தேவர் பேரவை சார்பாக பெரியார் பல்கலை கழக துணை வேந்தர் டாக்டர் கி.முத்து செழியனுக்கு பாராட்டு விழா ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஏற்பாடு  செய்தனர்.



‘எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த பாராட்டு விழா’ என்ற தேவர் பேரவை இதற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் கருணாஸை அழைத்து வந்தனர். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘இது எங்கள் தேவர் சமுதாயத்தின் குடும்ப விழா. எங்கள் தேவர்கள் குடும்ப விழா. எங்கள் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு மூலம் தமிழகம் முழுக்க உள்ள தேவர் குடும்பங்களை ஒரே குடும்பமாக இணைத்து வருகிறோம்.
நம் தேவர் சமுதாயத்தினர் சட்ட அறிவு பெற வேண்டும். இளைஞர்கள் தொழில்சார் படிப்புகளில் சேர்ந்து பயன் பெற வேண்டும்.

தேவர் இளைஞர்கள் மட்டுமல்ல அணைத்து சாதி இளைஞர்களும் குடி பழக்கதிற்கு அடிமை ஆக கூடாது. அவர்கள் குடி பழக்கத்தில் இருந்தால் அதில் இருந்து மீள வேண்டும். தமிழகத்தில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் வாங்கும் இலங்கை அகதிகள் குழந்தைகளின் உயர்கல்விக்கு நான் உதவுகிறேன்.


அவர்கள் பி.இ, எம்.பி.ஏ போன்ற உயர்படிப்பு படிக்க அனைத்துவித உதவியும் செய்து வருகிறேன்.  இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். இனியும் தொடர்ந்து செய்வேன் .  எனவே படிக்க ஆர்வம் இருந்து,பொருளாதார சூழல் இடம் கொடுக்கவில்லை என்றால் தயங்காமல் கருணாஸை வந்து பார்க்கலாம் அவர்களுக்காக என் வீட்டு கதவு திறந்தே இருக்கும்...’ என்றார்.

ad

ad