புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2013





         ""ஹலோ தலைவரே... கொடநாட்டிலிருந்து  ஜெ. ரிட்டன் ஆன பிறகு எந்த மந்திரிக்குப் பதவி பறிபோகுமோன்னு 32 மந்திரிகளும் திக்..திக் மனநிலை யோடுதான் இருந்தாங்க. ஒருத்தரையொருத்தர் சந்திச்சிக் கிட்டாக்கூட இதைப் பற்றித்தான் பேசிக்கிட்டாங்க. இப்பவும்கூட மந்திரிசபை மாற்றம் பற்றிய தகவல்கள் வந்துக்கிட்டேதான் இருக்குது. ஆனாலும், மந்திரிகள் பலரும் இப்ப பதவி பறிப்பு பயமில்லாம ஓரளவு தைரியமாத்தான் இருக்காங்க. சக மந்திரிகள்கிட்டே பேசுறப்ப, மேலிடம் முன்னே மாதிரி கோபப்படுறதில்லை.. கோபப்பட்டாலும் பதவியைப் பறிக்கிறதில்லைன்னு சொல்றாங்க.''


""மலையிலிருந்து திரும்பி வந்த பிறகு இந்த மாற்றமா?''

""இல்லை.. மலைக்குப் போறதுக்கு முன்னாடியே இந்த மாற்றம் தெரிஞ்சுதாம். முன்னெல்லாம் யாராவது ஒரு மந்திரியைக் கூப்பிட்டு ஜெ. டோஸ் விட்டாலே, அடுத்ததா அந்த மந்திரியோட பதவிக்கு வேட்டுதான்னு உறுதியாயிடும். சிவபதியை மாற்றுனதுகூட இப்படித்தான். ஆனா, கொடநாடுக்குப் போறதுக்கு முன்னாடி, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வனைக் கூப்பிட்டு 20 நிமிடம் கடுமையா டோஸ் விட்டிருக்கிறார் ஜெ. அழைப்பு வந்த  விஷயம் தெரிந்ததிலிருந்தே அமைச்சரோட ஆதரவாளர்கள், அண்ணனோட பதவிக்கு வேட்டுதானான்னு மிரண்டு போயிட்டாங்க. ஆனா டோஸ் விட்ட ஜெ.வோ, ஒழுங்கா இனிமே வேலையைப் பாருங்கன்னு சொல்லி அனுப்பியிருக்காரு. பதவி தப்பிச்சதில் வைகைச்செல்வனுக்குப் பரம திருப்தி. டோஸ் வாங்கியபிறகும் பதவி நீடிக்குதேன்னு சக அமைச்சர்களுக்கு ஆச்சரியம். கொடநாட்டிலிருந்து ஜெ. திரும்பியதும் வாங்கிக் கட்டிக்கிட்டவர் ராஜேந்திரபாலாஜி.''

""அவர் மேலதானே நிறைய சொத்துகளை வாங்கிட்டாருன்னு வழக்குப் போடப்பட்டு பரபரப்பு உண்டானது.''

""அந்த  வழக்கின் தீர்ப்பு வருவதற்கு இரண்டு நாள் முன்னாடிதாங்க தலைவரே ராஜேந்திரபாலாஜியை ஜெ. கூப்பிட்டு அனுப்பினார். உங்களை எப்படி மந்திரியாக்கினேன்னே எனக்குத் தெரியலைன்னு ஆரம்பிச்ச ஜெ., இப்படியா ஒரு கேஸ் வரும்வரை கேர்லெஸ்ஸா இருப்பீங்கன்னு கோபமா கேட்டிருக்கிறார். ராஜேந்திர பாலாஜியோ, எனக்குத் தொழிலே ரியல் எஸ்டேட்தான். அதனாலதான் அந்த இடங்களை வாங்கினேன்னு சொல்ல, நல்ல ஆடிட்டரா வச்சி சரிபண்ணுங்கன்னு அட்வைஸ் பண்ணிய ஜெ., உங்களால நான் எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்குது தெரியுமா? போய் அட்வகேட் ஜெனரலைப் பாருங்கன்னு சொல்லி யிருக்காரு.''

""என்ன விஷயமாம்?''


""ராஜேந்திர பாலாஜியோட கேஸில் தீர்ப்பு வந்த நாளில்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால் உள்ளிட்ட   பல நீதிபதிகள் பங்கேற்ற   விழாவில் ஜெ. கலந்துக்கிட்டாரு. ஒருவேளை, மந்திரிக்கு எதிரா தீர்ப்பு வந்திருந்தால் விழா மேடையிலேயே ஜெ.வுக்கு தர்மசங்கடமாகியிருக்கும். அத னால்தான், இந்த கேஸ் பற்றிஇரண்டு நாட்களுக்கு முன் னாடியே சட்டத்துறையின் ஆலோசனையைக் கேட்டிருக் கிறார். மந்திரி செய்தது தவறு தான்னு அவங்க சொல்லி யிருக்காங்க. அதனாலதான் அவரைக் கூப்பிட்டு சத்தம்  போட்டுட்டு, அட்வகேட் ஜெனரலை பார்க்கும்படி ஜெ. சொன்னார். கடைசியில், இந்த விவகாரம் தொடர்பா அரசுத் தரப்பின் விசாரணை இன்னும் தொடங்காததால முன்கூட்டியே மனு தாக்கல் செய்ய முடி யாதுன்னு சொல்லி ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மனுவை கோர்ட் தள்ளுபடி செஞ்சிடிச்சி. தப்பு நடக்கலைன்னு கோர்ட் சொல்லலை. ஒரு கண்டத்தி லிருந்துதான் மந்திரி தப்பிச் சிருக்காருன்னு கோட்டை வட்டாரத்தில் சொல்றாங்க. ஜெ.வும் இந்த விஷயத்தில் மந்திரியோட பதவியை தடா லடியா பறிக்கலை.''

""டோஸ் வாங்கிய மந்திரிகளின் பதவிகள் முன்புபோல பறிக்கப்படலைன்னா, சக மந் திரிகளும் தெம்பாகத்தான் இருப் பாங்க. இந்த மாற்றத்தின் பின்னணி என்னவாம்?''

""ஒவ்வொரு துறை மந்திரிக்கும் அவரவர் துறைக்குத் தகுந்த மாதிரி எம்.பி. தேர்தல் தொடர்பா ஒரு டார் கெட் நிர்ணயிக்கப் பட்டிருக்குதாம். அந்த டார்கெட்டை அச்சீவ் செய்யணும்ங்கிறதில் தான் ஜெ. இப்ப கவனமா இருக்காராம். அதனால, எம்.பி. தேர்தல் வரைக்கும் தங்களோட மந்திரி பதவிக்கு ஆபத்து எது வும் இருக்காதுன்னு மந்திரிகள் தெம்பா இருக்காங்க. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு மந்திரி மாற்றம் மற்றபடி சில இலாகா மாற்றங்கள் இருக்கலாம்னும் கோட்டையில் பேசப்படுது.'' 

""மந்திரிகள் மாற்றம் எப்போதுன்னு ஆளுங்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேச்சு ஓய்ந்து, ஜெ.வின் உதவியாளரான பூங்குன்றனைத் தூக்கிட்டாங்கன்னு மந்திரிகள் மத்தியில் பேச்சு அடிபடுதே? அதுவும், நால்வர் அணி மந்திரிகளோடு சேர்ந்து லாபி செய்தாருன்னும், அவங்களைப் பற்றி கட்சிக்காரர்கள் அனுப்பும் புகார்களை மேலிடத்திற்குப் போகாமல் மறைத்து விடுவதாகவும், மந்திரிகள் பெயரைச் சொல்லி இன்ஃபுளூயன்ஸ் செய் றாருன்னும், நிறைய  சொத்துகளை வாங்கிக் குவிச்சிருக்காருன்னும் பூங்குன்ற னைப் பற்றி நிறைய  பேச்சுகள் உலவுதே.. என்ன நிலவரம்?''


""முதல்வர் அலுவலகத்து அதிகாரி ஆண்டியப்பன் மாற்றப்பட்டதிலிருந்துதான் இந்தப் பேச்சு கிளம்பியது. அவரும் பூங்குன்றனும் கூட்டு சேர்ந்து பெரிய அளவில் விளையாடிட்டாங்கன்னு மந்திரிகள்  மத்தியில் பேச்சு கிளம்பி அது மீடியா வரைக்கும் பரவிடிச்சி. உண்மை என்னன்னு விசாரிச்சேங்க தலைவரே.. … ஆண்டியப்பன் கொஞ்சம் வேகமா செயல்பட்டுக் கிட்டிருந்திருக்காரு. டி.ஆர்.ஓ. சம்பந்தப்பட்ட மேட்டர் ஒன்றில் ஆண்டி யப்பன் பெயரைச்  சொல்லிக்கிட்டு அவரோட நண்பர் தலையிடுறாருன்னு மேலிடத்துக்கு வேலூர் கலெக்டர் ஒரு  புகார் அனுப்ப, இதையடுத்து ஆண்டியப்பன்கிட்டே முதல்வர் அலுவலக சீனியர் அதிகாரிகள் விசாரிச்சிருக்காங்க. தன்னோட நண்பர்னு சொன்னவர் தி.மு.க.காரர்னும் ரொம்ப காலமா அவர் தனக்குப் பழக்கம்னும் ஆண்டி யப்பன் ஒப்புக்கொண்டிருக்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் தி.மு.க.வைச் சேர்ந்தவரை முதல்வர் அலுவலகத்தில் இருப்பவர் தலையிட அனு மதிப்பதான்னு ஆண்டியப்பனைத் தூக்கிட்டாங்க. ஆனா, இந்த விவகாரம் பூங்குன்றன் சம்பந்தப் பட்டதா பெரியளவில் கிளம்பிடிச்சி. பூங்குன்றன் பெயரைச் சொல்லி ஒரு பத்திரிகைக்காரர் விளையாடிக்கிட்டிருக் கிறதாகவும் பேச்சு அடிபடுது.''

""சரி.. பூங்குன்ற னோட நிலைமை இப்ப என்ன? பவர் இருக்கா? ஃப்யூஸை பிடுங்கிட்டாங்களா?''


""கடிதங்களை வரிசைப்படுத்தி ஜெ.கிட்டே கொடுப்பதுதான் பூங்குன்றனோட முக்கியமான வேலை. அதுவும் எல்லா நேரத்திலும் கொண்டு போய் கொடுக்க முடியாது. மந்திரிகளையோ மா.செ.க்களையோ ஜெ. சந்திக்கிறப்ப, அவங்க மற்ற நிர்வாகிகளைப் பற்றி புகார் சொல்லுவாங்க. புகார் அனுப்பியிருக்கீங்களான்னு ஜெ. கேட்பார். அனுப்பியிருக்கேன்னு சொன்னால், பூங்குன்றனைக் கூப்பிட்டு கடிதம் வந்திருப்பதை உறுதி செஞ்சிக்கிட்டு உடனே சம்பந்தப்பட்டவங்க மேலே நடவடிக்கை எடுப்பது ஜெ.வோட வழக்கம். மந்திரிகள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் என்ன பேச்சு இருந்தாலும் ஜெ.வுக்கு பூங்குன்றன் மேலே இருக்கிற நம்பிக்கை இன்னும் குறையலை. சிறுதாவூர் பங்களா அமைந்திருக்கிற நிலத் தின் ஒரு பகுதி பூங் குன்றன் பெயரில்தான் இருக்குது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக் கட்டிடம் கட்டுறதுக்காக வாங்கப்படுற நிலத்தின் ரிஜிஸ்ட்ரேஷன் விஷயங்களை பூங்குன்றன்தான் கவனிக்கிறார். வெளியில் பல தகவல்கள் உலவினாலும் வழக்கம் போல கார்டனில் தன்னோட வேலையை பூங்குன்றன் பார்த்துக்கிட்டுத்தான் இருக்காரு.''

""தி.மு.க தரப்பு நியூஸ்?''

""கலைஞருக்கு கொஞ்சூண்டு நிம்மதி. அதை நான் சொல்றேன்.. .. 2ஜி கேஸில் அம்பானிக்கே ரிலீஃப் கிடைக் கலை. கோர்ட்டில் ஆஜராக வேண்டி யதாயிடிச்சி. தயாளு அம்மா ளும் சாட்சியா நேரில் ஆஜராக ணும்னு கோர்ட் உத்தரவிட்டிருந் திச்சி. அந்தம்மா வோட உடல்நிலை கருதி அவருக்கு நேரில் ஆஜராவ தில் விலக்கு அளிக்க ணும்னு தி.மு.க சைடில் சட்டரீதியா போராடுனாங்க. எய்ம்ஸ் டாக்டர்கள் குழு சென்னைக்கே வந்து பரிசோதிச்சி, சுப்ரீம் கோர்ட்டில் ரிப்போர்ட்டை தாக்கல் செய்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சிங்வி, ராதாகிருஷ்ணன் பெஞ்ச், சென்னையில் அமைக்கப்படும் நீதிபதிகள் குழு முன்பு தயாளு அம்மாள் சாட்சியளிக்கலாம்னு உத்தரவிட்டு, டெல்லி சி.பி.ஐ கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தாங்க.'' 


 லாஸ்ட் புல்லட்!

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசுத் தரப்புக்கு உதவ அனுமதிக்கவேண்டும் என பேராசிரியர் அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது ஆகஸ்ட் 21 அன்று  வாதம் நடந்தது. இந்த வழக்கில் அன்பழகன் எந்த வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார் என ஜெ. தரப்பு வக்கீல் கேள்வி எழுப்ப, இந்த வழக்கில் ஒட்டுமொத்த சமூகமே பாதிக்கப்பட்டிருக்கிறது என பேராசிரியர் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். பேராசிரியரின் மனுவை அனுமதித்து, எழுத்துப்பூர்வமாக வாதாடலாம் என நீதிபதி உத்தரவிட்டார். பேராசிரியர் தரப்பின் உதவியை ஏற்பதும் ஏற்காததும் அரசு வழக்கறிஞரின் விருப்பத்தைச் சார்ந்தது. இதனிடையே, டாக்குமெண்ட் காப்பிகளைக் கேட்டு பேராசிரியர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டும் வியாழன் வரை டாக்குமெண்ட் காப்பிகள் வழங்கப்பட வில்லை. நீதிபதி பாலகிருஷ்ணன் செப்டம்பர் 30-ந் தேதி ஓய்வு பெறுவதால் அதற்குள் தீர்ப்பு கிடைக்கவேண்டும் என ஜெ. தரப்பு எதிர்பார்க்கிறது. நடைமுறை தாமதங்கள், புதிய மனுக்கள் என வழக்கு நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் தி.மு.க. சட்டத்துறையினர். 

ad

ad